வியாழன், 3 ஜூன், 2010

இவர்கள் யார்?

எங்களுக்கு எப்போது
தடையில்லா மின்சாரம் கிடைக்கும்?
எங்கள் பாராளுமன்ற உறுப்பினரிடம் கேட்டேன்...
விரைவில் ஆவன செய்வதாய் உறுதியளித்தார்.

ஒருநாள் காலை
நிலங்களை அளவையிட
அதிகாரிகள் வந்தனர்...
விசாரித்துப்பார்த்தேன்.

சிறப்புப்பொருளாதார மண்டலம்
வரப்போகிறது என்றார்கள்...

அப்படியென்றால்....?

தடையில்லா மின்சாரம் வரும்...
தடையில்லா குடிநீர் கிடைக்கும்...
தொழிற்ச்சாலைகள் வரும்...
வேலைவாய்ப்புகள் பெருகும்...
பகுதி முழுவதும் வளமாகும்...

சரி

மக்கள் என்ன ஆவார்கள்...?
நிலங்கள் என்ன ஆகும்...?

மக்கள் வெளியேற்றப்படுவார்கள்
முறையிட்டால்...
போராடினால்...
சிறைவாழ்க்கை

நிலங்கள்...
அன்னிய நிறுவனங்களுக்கு
தாரைவார்க்கப்படும்...

வேலைவாய்ப்பு...
தற்காலிக
பணிப்பயிற்சி வேலை என்று
அடிமாட்டு விலைக்கு
கூலிகளாய் எடுப்பார்கள்

ஊதிய உயர்வோ
தொழிலாளர் சட்டத்தையோ காட்டி
சலுகைகளோ கேட்டால்...
இந்த பருப்பு இங்கே வேகாது என்பார்கள்...

எங்கள் மண்ணின் பூர்வீகத்தைப்பிடுங்கி
அன்னிய நிறுவனங்களுக்கு தாரைவார்க்க
இவர்கள் யார்?

1 கருத்து:

Unknown சொன்னது…

இவர்கள் எம்மை ஆள்வவர்கள்! இங்கே எல்லாம் ஆள்பவனுக்குத்தான் சொந்தம், வாழ்பவனுக்கு அல்ல!!!

கருத்துரையிடுக