செவ்வாய், 29 ஜூன், 2010

சாதியை ஒழித்து

சாதியை ஒழித்து தமிழராய் சேர
ஒன்றாய் வாருங்கள்
சாதியை மறந்து ஒன்றாய் சேர்வது
ஏய்ப்பது தானுங்க - நல்லா
ஏய்ப்பது தானுங்க

சாதியை ஒழித்து ஒன்றாய் சேர்ந்தால்
சமத்துவம் வந்திடுங்க
மறந்த சாதியை உசுப்பிவிட்டால்
மறுபடி வந்திடுங்க - சாதி
மீண்டும் வந்திடுங்க

படிக்கும்போது சாதி கேட்பதாய்
பதரும் தோழர்களே
மறுத்த உரிமையை மீட்டெடுக்க
கேட்பது தவறாங்க - சாதி
கேட்பது தவறாங்க

திருமணம் என்றால் சாதியில் தேடும்
சிந்தனை ஏனுங்க
சாதியை மறுத்து திருமணம் செய்தால்
குடியா முழுகிவிடும் - உங்க
உயிரா மாய்ந்துவிடும்

சட்டம்போட்டு சாதியை ஒழிக்கும்
அரசு இல்லீங்க
சாதியை வைத்தே அரசியல் நடத்தும்
கட்சி தானுங்க - உங்களை
ஆளும் கட்சிங்க

ஆட்சி மாறி அடுத்தவர் வந்தால்
அவரும் அப்படிதான்
சாதி இருந்தால் தேர்தலின்போது
பிரிப்பது எளிதுங்க அதனால்
வெல்வதும் எளிதுங்க

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக