சனி, 15 நவம்பர், 2025

விளையாடும் வயதில்,,,,

விளையாடும் வயதில்

காதல்...

காதலென்று சொல்ல

தகுதியுண்டா...


கண்கள் பேசின

கைவிரல் காதலுடன் பட்டதில்லை

நெஞ்சிலே காதல் மட்டும்

நித்தம் நித்தம்.


அறிந்த பெற்றோர்

அரட்டி வைத்தனர்

இருவரின் கல்வியும்

முடங்கிப்போயின.


இரண்டு ஆடுகளும் 

இருவேறு திசையில்

காதல் மனத்துடன்

முடங்கிப்போயின.


என்றாவது ஒருநாள்

பார்த்துவிட வேண்டுமென

எண்ணத்தில் மட்டுமே 

சுருங்கிப்போயின.


அவளின் மணக்கோலம்

அண்மையில் கண்டு

அடங்கிக் கெண்டது அவனின் மனது

ஆனது ஆண்டுகள் பல பத்து

இருவரின் வாழ்விலும்

இணையருடன் இல்வாழ்க்கை

அவரவர் வாழ்வில்

அவரவர் மகிழ்ந்தே.

வியாழன், 10 நவம்பர், 2016

யாருக்கான அரசு?

அச்சப்படவேண்டாம்
உங்கள் பணம்
உங்கள் கையில்...
இன்னும் இரண்டுநாளில்
வங்கிகளில்...
அஞ்சலகங்களில்...
இன்னும் சில இடங்களில்...
மாற்றிக்கொள்ளலாம்.


உடனடியாய் தேவையென்றால்
சுடுகாட்டிலும்
மருத்துவமனைகளிலும்
உங்கள் பணம்
செல்லுபடியாகும்.


பிணத்தை எரிக்க
600 உருவாய்
எங்களிடம் சில்லரை இல்லை
வேண்டுமானால்
சின்னப் பிணமாக ஒன்று
தாருங்கள்
1000 மாய் கணக்கிட்டுக்கொள்ளலாம்.
மீதி சில்லறை இல்லை.


மயக்கம் வருகிறது
நெஞ்சில் வலிக்கிறது
650 உருவாய்
மருத்துவமணையில்
வேண்டுமானால்
நாளையோ
நாளை மறுநாளோ
எப்போதோ வர இருக்கின்ற
வயிற்று வலி
கால் வலிக்கு
1000 உருவாய் கொடுத்துவிடுங்கள்
மீதி சில்லறை இல்லை.


கழிப்பறைத்தவிர
வேறு எங்குமே
பணமாகச் செலவளிக்காத
மேட்டுக்குடியினருக்கு
எவ்வளவு செலவோ
அதை மட்டும் அட்டையை செறுகி
அப்போதைய தேவை மட்டுமே
செய்துகொள்ளலாம்.


கருப்புப்பணமோ
கள்ளப்பணமோ
எதுவென்றாலும்
காகிதமாய் வைத்துதிருக்க
அவர்கள் ஒன்றும்
அப்பாவிகள் இல்லை.


மனையாக
மாளிகையாக
அடுக்ககங்களாக
அன்னிய நாட்டு
இரகசிய கணக்குகளாக...


முகனூலில் சொன்னார்...
சுவிஸ் பேங்குல கைய வைக்கச் சொன்னா
கிறுக்குப்பய
சுருக்குப்பையில கைய வைக்கான்...

யாருக்கான அரசு
யோசிப்போம்

புதன், 4 நவம்பர், 2015

இறைவனுக்கே

போட்டுக் கிழிந்ததை விட
பார்த்தும் அலமாறியில் அடுக்கியும்
கிழிந்ததுதான் அதிகம்.


இல்லாதவர்கள் கிழிந்தாலும் தைத்துப்போடுகிறார்கள்
இருப்பவர்கள் பித்தான் பிய்ந்ததற்க்கே
புத்தாடை எடுக்கின்றார்கள்.

ஆண்டுதோறும் வரும் பிறந்த நாளுக்கொன்று
பிறந்த நட்சத்திரத்திற்க்கொன்று
கோயிலுக்குப்போய் வழிபட்டு வர ஒன்று
புத்தாடை எடுப்பதற்கென்றே
புதிது புதிதாய் காரணங்கள்.
இன்னும் சிலரோ
மகிழ்ச்சியைக் கொண்டாட என்கின்றனர்.
இதுவா மகிழ்ச்சி

ஈதல் மகிழ்ச்சி
இல்லாதவர்க்கு ஈதல் மகிழ்ச்சி
நிறைய செய்கின்றேனே....
இன்னும் செய்தால் என்ன?
இல்லாதவர்களை இல்லாமல் ஆக்கிவிட்டு
மகிழ்ச்சியாய் கொண்டாடுங்கள்
மனம் நிறைவாய் கொண்டாடுங்கள்.

இல்லாதவர்களுக்கு இறைவன் தருவான்...
இறைவனுக்கே இல்லாதவனும் தந்தால்தான்.,

ஞாயிறு, 1 நவம்பர், 2015

விதண்டாவாதம்


தங்கத்தில் ஆபரணங்கள்
ஐம்பொன் சிலைகள்
களவு போகாமல் இருக்க
கெட்டியான பூட்டு.
பக்தன் தருகின்ற
காணிக்கைக் காசுகளை
கள்வன்அபகரிக்காமலிருக்க
திண்டுக்கல் பூட்டு
கோயிலை பராமரிக்கும்
பக்தனுக்கும் தெரியும்
கோயிலில் இருக்கின்ற
சிலைகள் கல் தானென்று.
கல்லுக்கு இவைகளைக்
காக்கும் சக்தி இல்லையென்றும்
தனக்கான பொருளை
தன்னால் காக்க முடியாதென்றும்
உன்னை எப்படி
காக்குமென்றும் கேட்டால்
விதண்டாவாதம் வேண்டாமென்பான்.

சனி, 31 அக்டோபர், 2015

கடவுள் நம்பிக்கை

நான்கு சக்கரத்திலும்
எழுமிச்சை பழத்தினை வைத்து
வழிவிடு விநாயகனை
வணங்கி செல்கின்ற
ஓட்டுனருக்கு
வாகனத்தில்
''பிரேக்'' இருக்கின்ற
நம்பிக்கையே
கடவுளை நம்பவில்லை
என்பதால்தான்

திங்கள், 1 செப்டம்பர், 2014

விடிவெள்ளி

சிறையில் அடைத்து
காயடிக்க வைத்திருந்த
புரட்சி விதையொன்று
தப்பி வந்தது.

புரட்சி விடியலை எதிர்நோக்கும்
இருண்ட பூமியில்
நம்பிக்கை பிறந்தது.
நமக்கென்று சூரியன் புறப்படுமுன்னே
விடிவெள்ளி முளைத்துவிட்டதென்று.

விடியலுக்காய் காத்திருந்த
விடிவெள்ளியை
பொன்பரப்பியில் நாசக்காரர்கள்
நசுக்கியே கொன்றுவிட்டார்கள்.

பயிர்கள் தண்ணீருக்காய் அழும்போது
உழுதவனின் செந்நீரால்தான்
பயிரை பாதுகாக்க முடியுமென்றறிந்தபோது
அவனும்
தன் செந்நீரை தண்ணீராய் தரத்துணிந்தான்.

அணை நீரை விடச்சொல்லி
ஆணை பிறப்பதெப்போது
அணையையே தகர்த்துவிட்டால்....
தகர்த்துவிட ஆயுதம் தாங்குமுன்னே
ஆயுதத்தால் தாக்கப்பட்டான்.

அந்த விடிவெள்ளி
தமிழகத்தின் மண் பரப்பை
தன்கால்களாலேயே அளந்துபார்த்தான்

காவல் நிலையங்களில்
கண்காணிப்பு தொடரும்போது
துணிவை தன் தோளில்போட்டிருந்தவன்
அரிதாரமே இல்லாமல்
அலட்சியமாய் திரிந்தான்.

தாக்கிய மக்களை
தாக்குவதற்கு அவனுக்கொன்றும் சிரமமில்லை...
தாக்குவது அரிதாரம்போட்ட காவல் ஏவலர்கள்

அதையும்தாண்டி தாக்கினால்
அருகில் அழிவதுதன் இனமே...

இந்த மண்ணின்
புரட்சி சரித்திரம் எழுதும்போது
அவன் முதல் பக்கத்தில்...
முதல் வரியில்....
முதல் எழுத்தாய்....
கட்டாயம் இருப்பான்.

அப்போது தெரியும்
அவன் யாரென்று.
அவனை அடித்தே கொன்றவர்கள்
தன்னையே அழித்துக்கொள்ள தயாராய் நிற்பர்.

அவனுக்காய்
இந்த மண்ணும் கண்ணீர் விடும்
இம்மண்ணின் நம்பிக்கை நட்சத்திரத்தை
நசுக்கியே கொன்றவர்களை
நாம் சுமந்தோமே என்று...

அவனுக்காய்
மவுன அஞ்சலி செலுத்தாதீர்கள்
மவுன அஞ்சலியால் மதியிழந்தது போதும்
வீர வணக்கத்தை
வெறும் வாயால்...
வெறும் மனதால்...
மரியாதையாய்...
செலுத்திடாதீர்கள்.

வீர சரித்திரத்தை
படைத்துவிட்டு
அதையே அவனுக்கு பரிசாக்குங்கள்.

இது எழுதப்பட்ட நாள் 07/03/1988

செவ்வாய், 13 ஆகஸ்ட், 2013

விடியுமா இந்தியாவிற்கு

வெள்ளையன் வந்தான்

வணிகத்திற்காய் வந்தவன்

ஆள்பவனாய் போனான்

வெவ்வேறு காரணத்திற்காய் போராடினோம்

விரட்டியடித்தோம் வெள்ளையனை என்று

இறுமாந்திருந்த நேரம்

இருட்டில் வந்தது சுதந்திரம் என்றான்....

இருட்டாய் போனது இந்திய நாடு

வெள்ளையன் போனர்ன்

கொள்ளையன் வந்தான்

ஆள் மாற்றமே தவிர ஆட்சி மாற்றம் வரவில்லை

விடியுமா இந்தியாவிற்கு?