நகரத்திற்கு வந்தேன்
மூட்டை தூக்கினேன்
பொருளாதாரம் கிடைத்தது
புறநகர் வந்தேன்
பெட்டிக்கடை வைத்தேன்
பொருளாதாரம் பெருத்தது
கிராமபுரம் வந்தேன்
விவசாயம் செய்தேன்
பொருளாதாரம் நிலைத்தது
பொருளாதார மண்டலம் என்றது அரசு
நிலத்தை எடுத்துக்கொண்டார்கள்
நகரத்திற்கு வந்தேன்
மூட்டை தூக்குகின்றேன்...
---- சாக்கோட்டை மு. இளங்கோவன்