திங்கள், 27 ஆகஸ்ட், 2012

உண்மைக்காதலா?


வயது பார்க்காமல்
வசதி பார்க்காமல்
இடம் பார்க்காமல்
சூழல் பார்க்காமல்
யாரையும்
எதையும்
எப்போதைக்கும்
எவ்விடத்தும்
காதல் வரும்

எப்போதும்
எத்துணை முறையும்
காதல் வரும்

ஒன்றாய்
இரண்டாய்
ஓராயிரமாய்....

யோசித்தேன்

தாங்குமா இதயம்

காதல் ஒன்றாய் இருந்தால்
உலகம் ஒப்புக்கொள்ளும்
காதல் இரண்டாய் இருந்தால்
உலகம் யோசிக்கும்
காதல் ஒராயிரமாய் இருந்தால்
உலகம் சிரிக்கும்

அவளும் அவனும் சிரித்தால்
மகிழ்ச்சி
அவளையும் அவனையும் பார்த்து
உலகம் சிரித்தால்
இகழ்ச்சி

பலருக்கு ஒன்றாய்....
இரண்டாய்....
மூன்றாய்...
எல்லாம் ஒவ்வொன்றாய்....
ஒன்றன் பின் ஒன்றாய்....
ஒன்று இல்லையென மற்றொன்றாய்...

சிலருக்கு ஒன்றுமட்டுமே
உயிருள்ளவரை உண்மையாய்....

யோசித்தேன்....

கிடைத்ததை கொண்டு மகிழ்வது
உண்மைக்காதலா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக