வியாழன், 16 செப்டம்பர், 2010

ஊடகங்கள்

எங்கள் ஊரில் மழைப் பெய்தது
வீடுகளில் பாதுகாப்பாய் அடைந்தோம்…
சாலை முழுவதும் மூழ்கிப்போயின…
ஊடகங்கள் சொன்னது…
“வெள்ளக்காடாய் தமிழகம்
இயல்பு வாழ்க்கை பாதிப்பு”

உங்கள் ஊரில் மழைப் பெய்தது
இல்லை… இல்லை…
குண்டு மழைப் பெய்தன…
மரத்தடியில்... பதுங்கு குழிக்குள்...
பதுங்கி போனீர்கள்...
ஆமி காரன் அழைத்துச்சென்று அடைத்து வைத்தான்
முள்வேலி முகாம்களில் மூக்கைக் கிழிக்கும்
முடைநாற்றம் வீச...

வீடுகள் முழுவதும் சிங்களவன் குடியேற்றம்...

ஊடகங்கள் வாய்திறக்கவில்லை...

இந்திய ஊடகங்கள் வாய்திறக்கவில்லை...

ஒன்றிரண்டு தமிழ் ஊடகங்கள் வாய்திறந்தன...
“தமிழர்கள் பாதுகாப்பான இடத்தில்
பராமரிக்கப்படுகிறார்கள்”
இராச பச்சே அறிவிப்பு...?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக